இங்கிலாந்து - பாகிஸ்தான் : இரண்டாம் நாள் முடிவில் வலுவான நிலையில் பாகிஸ்தான்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 50 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த பாகிஸ்தான், அசார் அலி (50), சபிக் (59), பாபர் அசாம் (68), மற்றும் சதாப் கான் (52) என அரைச் சதங்கள் கடக்க 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 350 ரன்களை எடுத்துள்ளது.
பாபர் அசாம், ரிட்டயர் ஹேட் (retd hurt) மூலம் ஆடுகளம் விட்டு அகன்றமை குறிப்பிடத்தக்கது.
பந்து வீச்சில் அன்டர்சன் மற்றும் ஸ்ரோக்ஸ் 3 விக்கெட்கள், பிராட் மற்றும் வூட் ஒரு விக்கெட் என வீழ்த்தினர்.
முன்னதாக முதல் நாளில் 184 ரன்களுக்கு இங்கிலாந்து சுருண்டது.
முதல் நாள் விபரம்: இங்கே கிளிக் செய்க.

Comments
Post a Comment