இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 350 ரன்கள் எடுத்திருந்த பாகிஸ்தான் 363 ரன்களுக்கு 9வது விக்கெட்டை இழந்தது. பாபர் அசாம் retd out என்பதால் பாகிஸ்தானின் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து, மூன்றாம் நாள் ஆட்டம் நிறுத்தப்படும் போது 6 விக்கெட்களை இழந்து 235 ரன்கள் எடுத்துள்ளது.
வெறுமனே 56 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
அதிகபட்சமாக ஜோய் ரூட் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
களத்தில் அரைச்சதம் கடந்த நிலையில் ஜோஸ் பட்லர் (66*) மற்றும் டோமினிக் பேஸ் (55*) உள்ளனர்.
மொகமட் அமீர், மொகமட் அபாஸ் மற்றும் சதாப் கான் தலா இரு விக்கெட்களை வீழ்த்தினர்.
முன்னதாக முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 185 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் 4ம் நாள் ஆட்டம் இன்றாகும்.

Comments
Post a Comment