காயம் காரணமாக, ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து ஹர்திக் பாண்ட்யா வெளியேற்றப்பட்டுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்திய அணி பந்துவீச்சின் போது, 18-வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்ட்யா திடீரென ஏற்பட்ட முதுகு வலியால் மைதானத்தில் அப்படியே சுருண்டு விழுந்தார்.
தொடர்ந்து வலியால் துடித்தமையால் மைதானத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும், அவருக்குப் பதிலாக தீபக் சஹார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேபோல, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது, விரலில் காயம் ஏற்பட்டதால் அக்சர் படேல் மற்றும், ஹாங்காங் உடன் காயம் அடைந்த ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் அணியில் இருந்து விலகியுள்ளனர்.
அவர்களுக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும், சித்தார்த் கவுல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாற்றம் செய்யப்பட்ட விபரங்கள்:
பாண்ட்யா க்கு பதிலாக சஹார், அக்சர் க்கு பதிலாக ஜடேஜா மற்றும் தாக்கூர் க்கு பதிலாக கவுல்.

Comments
Post a Comment