இங்கிலாந்து - பாகிஸ்தான்: முதல் நாளில் பாகிஸ்தான் ஆதிக்கம்.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வெறுமனே 184 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக முன்னாள் தலைவர் அலிஸ்டைர் குக் 70 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் மொகமட் அபாஸ் மற்றும் ஹசன் அலி 4 விக்கெட்கள் வீழ்த்த அமீர், அஷ்ரப் ஒரு விக்கெட் எடுத்தனர்.
பதிலளித்து ஆடிவரும் பாகிஸ்தான் முதல் நாள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 50 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஹரிஸ் சொகைல், அசார் அலி உள்ளனர். ஸ்டுவட் பிராட் வீழ்ந்த ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

Comments
Post a Comment