![]() |
| Picture Credit: Twitter |
இங்கிலாந்து - பாகிஸ்தான்: முதல் டெஸ்டில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்.
இங்கிலாந்தின் உலகப் புகழ் பெற்ற லோட்ஸ் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 184 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அலெஸ்டர் குக் 70 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் முகமது அப்பாஸ் மற்றும் ஹசன் அலி தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
பபதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 363 ரன்கள் எடுத்தது. அசார் அலி, ஆசாத் ஷபிக், பாபர் ஆசம் மற்றும் ஷதாப் கான் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 179 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி, 242 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கேப்டன் ஜோ ரூட் 68, ஜோஸ் பட்லர் 67 மற்றும் அறிமுக வீரர் டொமினிக் பெஸ் 57 ஆகியோர் அரைச்சதம் கடந்தனர். ஒரு கட்டத்தில், 110 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 7வது விக்கெட்டில் ஜோஸ் பட்லர் - டொமினிக் மெஸ் ஜோடியின் பாட்னர்சிப்பால் முடிவில் இங்கிலாந்து அணி 242 ரன்கள் எடுத்தது. முகமது அப்பாஸ் மற்றும் முகமது ஆமீர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
64 ரன்கள் என்ற இலகுவான டார்கெட்டுடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து சேஸிங் செய்து 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது. இமாம் உல்ஹக் 18, ஹரீஷ் சொஹைல் 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

Comments
Post a Comment